பெட்டிக்கடைக்காரர் கொடூர கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேருக்கு குண்டாஸ்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பெட்டிக்கடைக்காரன் கொடூர கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் 2 பேருக்கு குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
திருத்தணி பெரியார் நகர் பகுதி யைச் சேர்ந்த வெட்டு ராஜா (எ) யுவராஜா (42)
பெட்டிக்கடைக்காரன். அவரை கடந்த மாதம் அவரது வீட்டு வாசலில் அவரது மனைவி மகள் கண் எதிரில் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து திருத்தணி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி சுசில்(24), லாரன்ஸ், விக்ரம், அரக்கோணம் பகுதியில் சேர்ந்த ஹேமந்த், ஹரிஷ் உட்பட 5 பேரை கைது செய்து சென்னை புழல் சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுசில் மற்றும் திருத்தணி ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த கொலை வழக்கு குற்றவாளி விக்ரம் (23) ஆகியோர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதால், சுசில் மற்றும் விக்ரம் ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்பி சாய் பிரணீத் பரிந்துரை ஏற்று மாவட்ட கலெக்டர் கவிதா குண்டார் சட்டத்தின் கீழ் சுசில், விக்ரம் ஆகியோரை கைது செய்ய உத்தரவிட்டடார்







