மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் நடத்திய மகளிருக்கான புற்றுநோய் கண்டறியும் சிறப்பு பரிசோதனை முகாமை அமைச்சர் வெங்கடரமணன் தொடக்கி வைத்த நிகழ்ச்சியில் 46பேர் பரிசோதனை:-
மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகமும், மயிலாடுதுறை ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய மகளிருக்கான புற்றுநோய் கண்டறியும் சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற முகாமை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தொடக்கி வைத்து பார்வையிட்டார். முகாமில், மகளிரை பாதிக்கக்கூடிய மார்பகப் புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய் உள்ளிட்ட 16 வகையான புற்றுநோய்களை துல்லியமாகக் கண்டறியக்கூடிய மேம்பட்ட மருத்துவக் கருவிகள் மற்றும் டிஜிட்டல் மேமோகிராபி இயந்திரங்கள் வாயிலாக மருத்துவக்குழுவினர் பரிசோதித்து தேவையான ஆலோசனைகளை வழங்கினர். முகாமில், மொத்தம் 46 பெண்கள் பரிசோதனை செய்துகொண்டதில், ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹாபிரியா, மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ ஜமால்முகம்மது யூனூஸ், தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

















