பேரணாம்பட்டில் கனமழையால் சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்! வாகன ஓட்டிகள் கடும் அவதி-மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால் சுகாதாரச் சீர்கேடு – தண்ணீரை அகற்ற நகராட்சி நிர்வாகத்துக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் பெய்து வரும் கனமழையால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.குறிப்பாக, பேரணாம்பட்டு–வி.கோட்டா சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையைக் கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.இதற்கிடையே, சாலையில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றி, சீரான வடிகால் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பேரணாம்பட்டு நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனிடையே, மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் பேரணாம்பட்டு வருவாய்த் துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

















