அனைக்கட்டில் பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அப்புக்கல் சாலையில் தனியார் திருமண மண்டபத்திற்கு பின்புறம் செயல்பட்டு வந்த ஹரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் இயங்கி வருகிறது இதில் கடந்த 21 ஆம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது இதில் இரண்டு பெண்கள் உட்பட பத்து பேருக்கும் 10க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்அப்போது குடோனில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் பணியில் இருந்த கொட்டாவூர் பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவர் உயிரிழந்தார் இதனை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் .ஜோசப் விஜய் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் இயங்கிவந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவித்ததை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் லீலா அலெக்ஸ், விபத்தில் பலியான காயத்ரி குடும்பத்தினரிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 4 லட்சத்துக்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உடனிருந்தார்.

















