மார்பின், கோடீன், ஃபென்டனில், ஹெராயின் போன்ற போதை Opioid பொருட்கள் வகையைச் சேர்ந்த Tapgard 100 என்ற வலி நிவாரணி மாத்திரையை சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்த நான்கு பேர் கைது, போதிய விவரங்கள் வழங்குவதற்கு காவல்துறை மறுப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் காவல் சரகத்திற்குட்பட்ட மேலமுக்கூட்டு பகுதியில், அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சந்தேகத்திற்கு இடமான பார்சல் வந்தது காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது, இதன் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட பொழுது தஞ்சாவூரைச் சேர்ந்த பிரஜேஷ் என்ற இளைஞர், வடமாநிலத்தில் ஒரு மருந்து கம்பெனியில் இருந்து Tapgard 100 என்ற வலி நிவாரணி மாத்திரைகளை அதிக அளவில் வாங்கி இருப்பது தெரியவந்தது. opioid வகையைச் சேர்ந்த இந்த வலி நிவாரணி, மார்பின், கோட்டின், பென்டனில், ஹெராயின் போன்ற போதை பொருட்கள் தயாரிப்பின் முக்கிய மூலப் பொருளான ஓபியத்தின் மூலம் தயாரிக்கப்படுவதாகும். அதிக அளவில் உட்கொள்ளும் பொழுது, நரம்பு மண்டலத்தை பாதித்து போதைப் பொருளாக இது பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். பிரஜேஷ் என்ற இளைஞருக்கு வட மாநிலத்திலிருந்து, 200 மாத்திரைகள் வந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர் சம்பவத்தில் மேலும் தொடர்புடைய, தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஹரி பிரசன்னா, வீரநாதன், யஷ்வந்த் ஆகிய மூன்று பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். எந்தவிதமான வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளது என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டனர். இச்சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

















