மாநிலப் பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீட்டில் தாமதம் – பொதுமக்கள் பாதிப்பு!
மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ₹3,895.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டு, செய்திகள் மட்டுமே வெளியாகியுள்ளன. ஆனால், அறிவிக்கப்பட்ட நிதியை விடுவிப்பதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கும், நகராட்சி நிர்வாகத் துறைக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இரு துறைகளுக்கிடையேயான இந்த அதிகாரப் போட்டியால், ஒப்பந்தம் பெற்ற ஒப்பந்ததாரர்கள் பணிகளைத் தொடங்காமல் காலதாமதம் செய்து வருவதாகத் தெரிகிறது. இதனால், மழைக்காலத்தில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலையிட்டும் தீர்வு எட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கூடுதல் தலைமைச் செயலாளர் கே. எஸ். பழனிசாமி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர் மதுசூதன ரெட்டி ஆகியோர் தலையிட்டு, நிதி விடுவிப்பு மற்றும் பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசுத் துறைகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். எனவே, நிதியை விரைந்து விடுவித்து, மழைக்காலப் பாதிப்புகளைத் தடுக்கத் தேவையான பணிகளை உடனடியாகத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

















