தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகர செயலாளர் உட்பட 200 க்கு மேற்பட்ட மேற்பட்டோர் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் லட்சுமணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் விழுப்புரம் நகர தமிழக வாழ்வுரிமை கட்சி செயலாளர் மோகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் லட்சுமணன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். மாற்றுக் கட்சியில் இருந்து திமுகவிற்கு வந்த வந்தவர்களை டாக்டர் லட்சுமணன் கட்சியின் துண்டை அணிவித்து வரவேற்றனர்.
அப்போது பேசிய எம்.எல்.ஏ டாக்டர் லட்சுமணன் தமிழகத்தில் இன்று அறிவிக்கபடாத மின்வெட்டுகள் நடைப்பெற்று வருகின்றன். இது தான் அவர்கள் செய்த சாதனை ஆகும்
முதல்வர் விஜய் ஆட்சி, திமுக தலைவர் தொடங்கி செயல்படுத்திய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் ஆட்சி தான் நடைப்பெற்று வருகின்றன என்று பேசினார்

















