விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய அனைத்து பயிர் கடன் களையும் முழுமையாக ரத்து செய்ய கோரி வேலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மறியல் போராட்டம் – போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
வேலூர்மாவட்டம்,தலைமை தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டமானது மாவட்ட பொருளாளர் கன்னியப்பன் தலைமையில் நடைபெற்றது இதில் திரளான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சார்ந்தோர்களும் பங்கேற்று தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு பயிர்கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் இலவச மின்சாரத்தை முற்றும் ஒழித்து கட்டும் நோக்குடன் கொண்டு வந்த ஸ்மார்ட் மின்மீட்டர் திட்டத்தைகைவிட வேண்டும் .தமிழக அரசு எந்தவித நிபந்தனையும் இன்றி நடப்பு பருவத்திற்கு அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்கடனை உடனே வழங்கவேண்டும். (எல் நினோ) காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விவசாய பாதிப்புகளுக்கு தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணம் வழங்க கோரி ஒன்றிய அரசை கண்டித்து. கோஷங்களை எழுப்பினார்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்
















