வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை – விடுமுறை அறிவிக்கப்படாததால் நனைந்தபடியே பள்ளிக்குச் சென்ற மாணவர்கள்; பெற்றோர்கள் வேதனை:
காட்பாடி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி நுழைவாயிலிலேயே குப்பைகள் மற்றும் கடைகள் இருப்பதால் பள்ளி மாணவிகள் பள்ளிக்குள் செல்லும் பொழுது கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் வேலூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே பள்ளிக்குச் சென்றனர்.வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது..இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகினர்.இந்த நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவ, மாணவிகள் வழக்கம்போல் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. குடை பிடித்தும், மழைக்கோட் அணிந்தும் சென்ற மாணவர்கள் பலர் மழையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாமல் நனைந்தபடியே பள்ளிகளுக்குச் சென்றனர்.குறிப்பாக, சிறிய வயதுடைய பள்ளிக் குழந்தைகள் மழையில் நனைந்தபடி பள்ளிக்குச் சென்றதைக் கண்ட பெற்றோர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நேரத்தில் முடிவெடுக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்காட்பாடி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி நுழைவாயிலிலேயே குப்பைகள் மற்றும் கடைகள் இருப்பதால் பள்ளி மாணவிகள் பள்ளிக்குள் செல்லும் பொழுது கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும் என்பது பொதுமக்கள் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
.

















