காட்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் கொள்ளை.வேலூர் எஸ்.பி. சிவராமன் நேரில் ஆய்வு.
வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை காந்தி தெருவைச் சேர்ந்தவர் மீராபாய் (65). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான இவர் கடந்த 14-ஆம் தேதி பெங்களூருவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.இந்நிலையில், மீராபாயின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுத் இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஊர் திரும்பிய அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 20 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து மீராபாய் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, கைரேகை நிறுவனர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன கொள்ளை நடந்த வீட்டிற்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டார். கொள்ளை நடந்த விதம் குறித்து விசாரித்த அவர் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கக் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் ஆள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு அரங்கேறிய இத்துணிகர கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

















