பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடர்ந்து 25 ஆண்டுகளாக அரசு பணியில் பணியாற்றி வருவதை முன்னிட்டு திருவாரூரில் பாஜக சார்பில் சேவா ஜோதி பேரணி சிறப்பாக நடைபெற்றது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடர்ந்து 25 ஆண்டுகளாக அரசு பணியில் பணியாற்றி வருவதை முன்னிட்டு இன்று பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் திருவாரூர் கிழக்கு கோபுர வாசலில் சேவா ஜோதி பேரணி சிறப்பாக நடைபெற்றது.
பேரணிக்கு முன்னதாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களிடம் உரையாற்றும் நிகழ்ச்சியை பொதுமக்கள் நேரலையில் காணும் வகையில் பாஜகவினர் காணொளி காட்சி அமைத்தனர்.
வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கான உறுதி மொழியை பாஜகவினர் ஏற்றனர். பின்பு சேவா ஜோதியை தேசிய பொது குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன் ஏற்றி வைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
இந்த சேவா ஜோதி பேரணி திருவாரூர் கிழக்கு கோபுர வாசலில் இருந்து புறப்பட்டு நடைபயணமாக கீழவீதியில் நிறைவு பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் பேட்டை சிவா, மாவட்ட பொது செயலாளர் சங்கர், விவசாய அணி மாநில துணைத்தலைவர் கோவி.சந்துரு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.















