இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பலி. திருமணம் ஆகி பத்து நாட்களான தம்பதி, இளைஞர் உள்ளிட்ட மூன்று பேர் ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூர் அனுப்பப்பட்டுள்ளனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் மணிமாறன் என்பவரின் மகன் சுபிக்ஷன் (20) பொறியியல் கல்லூரி மாணவரான இவர் மயிலாடுதுறை தனியூர் சாலிய தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் ஸ்ரீராம்(28) ஆகிய இருவரும் குத்தாலம் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறை நோக்கி வந்துள்ளனர். ஶ்ரீராம் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். மகாதானபுரம் என்ற இடத்தில் இருசக்கர வாகனம் முன்னாள் சென்ற பேருந்தை கடந்து மாறி செல்ல முயன்ற போது எதிரே இருசக்கர வாகனத்தில் தம்பதிகள் வந்த நிலையில் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் அதிவேகமாக மோதிக்கொண்டது. இந்த விபத்தில் இருச்கர வாகனத்தில் அமர்ந்து வந்த சுபிக்சன்’ சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த தம்பதிகள், இளைஞர் ஶ்ரீராம் ஆகிய மூவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. விபத்தில் படுகாயமடைந்த மயிலாடுதுறை தருமபுரம் ரோடு முகமது ரமீஸ் மகள் பாத்திமா ஜெப்ரானா(19) அவரது கணவர் நாகூர் பனங்குடியை சேர்ந்த அப்துல் சர்தார்(22) ஆகிய இருவருக்கும் திருமணமாகி 10 நாட்களே ஆன நிலையில் தனது தந்தை கீழே விழுந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை பார்ப்பதற்காக தன் கணவருடன் மயிலாடுதுறைக்கு வந்துள்ளார். இன்று மயிலாடுதுறையில் இருந்து குத்தாலம் நோக்கி சென்றபோது இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்தது தெரிய வந்தது. இச்சவம் அறிந்த உறவினர்கள் நண்பர்கள் மருத்தவமனையில் திரண்டனர். தொடர்ந்து தம்பதிகள் இருவரும் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கும், ஶ்ரீராம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.















