கிளியனூர் கிராமத்தில்
மதவெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இஸ்லாமிய அமைப்பினர் புகார் மனு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கிளியனூர் கிராமத்தில் மதவெறுப்பை தூண்டும் வகையில் கைபேசியில் பேசிய உரையாடல் சம்பந்தப்பட்ட ஊர் ஜமாத்தினர் வசம் வந்தவுடன் கலந்து ஆலோசித்து அனைத்து ஜமாத்தினர் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவர்களை சந்தித்து
கிளியனூர் கிராமத்தில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றுபட்டு அமைதியாகவும், சமுதாய நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கிளியனூர்-அகரவள்ளம் பகுதியைச் சேர்ந்த கதிரவேல் என்பவரின் மகன் சந்திரசேகரன் என்பவர் தொடர்ச்சியாக மத வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்றில், அவர் மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து மிகவும் ஆபாசமான, அவதூறான மற்றும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசியுள்ளார். மேலும், கிளியனூரில் உள்ள மசூதிகள் இடிக்கப்பட வேண்டும், முஸ்லிம்களின் வீடுகள் தகர்க்கப்பட வேண்டும் மற்றும் அனைத்து முஸ்லிம்களும் இந்த நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்று மிகக் கடுமையான முறையில் அவர் பேசிய ஆடியோ எங்களிடம் அதனை தங்களின் பார்வைக்கு அனுப்பி உள்ளோம் எங்கள் ஊரில் மதநல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய சந்திரசேகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவர்களிடம் புகார் மனு அளித்தனர். இது குறித்து அவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கலந்து ஆலோசித்து உடன் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் பத்திரிகையாளரை சந்தித்த இஸ்லாமிய கூட்டமைப்பின் பொறுப்பாளர் சாதிக் அவர்கள் மாவட்ட ஆட்சியர் உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி உள்ளார் அப்படி தவறும் பட்சத்தில் இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராட்டத்தை நடத்துவதாக கூறியுள்ளார்.















