கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுக்காவிற்கு உட்பட்ட பாக்கோடு பாறவிளை பகுதியில் அனுமதியின்றி செம்மண் மற்றும் பாறை உட்பட கனிமவள பொருட்கள் கடத்தல் நடப்பதாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் சமூக ஆர்வலர்கள் கடத்தல் நடக்கும் காட்சிகளை வீடியோவாக வெளியிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுக்காவிற்கு உட்பட்ட பக்கோடு பாறவிளை பகுதியில் பால்ராஜ் என்பவர் எந்தவித அனுமதியும் இன்றி பாறை ,செம்மண் உட்பட கனிமவளங்களை கிட்டாச்சி உதவிடன் உடைத்து தினம் தோறும் அரசு அலுவலக வேலை நேரத்திற்கு பிறகு ஐந்து மணி முதல் காலை ஆறு மணி வரை விடிய விடிய டெம்போக்கல் மூலம் கடத்தப்பட்டு வருவதாகவும் இது குறித்து பல புகார்கள் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது மேலும் பால்ராஜ் பல கோடிக்கு சொந்தமானவர் என்பதால் அதிகாரிகள் நெருங்க முடியாது என்றும் குற்றச்சாட்டு எழுப்பி சமூக ஆர்வலர்கள் வீடியோவோடு வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது















