டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரியை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை கைது செய்தததை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் தலைமை தேர்தல் அதிகாரியின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
உருவ பொம்மை எரிக்கப்பட்டதை தடுக்க முயன்ற போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம்.
நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு மக்கள் அவதி
டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் பதவி நீக்கம் செய்யக்கோரி நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை கைது செய்த மத்திய பாஜக அரசை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் குழித்துறை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் தலைமை அதிகாரி ஞானேஷ் குமார் மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது தடீரென தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமாரின் உருவபடத்திற்கு தீயிட்டு கொளுத்தினர் இதனை தடுக்க முயன்ற போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து போலீசார் கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க தண்ணீர் கொண்டுவந்து அணைக்க முயன்றும் போராட்டகாரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதால் போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர் உடனே போராட்டகாரர்கள் சாலையின் நடுவே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் இதனால் திருவனந்தபுரம் – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனையடுத்து போலீசார் அவர்களிடம் சமரசம் நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு பேரணியாக நடந்து கட்சி அலுவலகத்திற்கு வந்தடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பீக் நேரம் என்பதால் பொதுமக்கள் இந்த போராட்டத்தால் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள் இதனால் ஒரு மணி
நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது















