வருகின்ற 10, ஆம் தேதி
ராகுல் காந்தி
சென்னை தீவுத்திடலில் கல்லூரி மாணவர்களுடன் மாணவர்களின் குரல், என்ற நிகழ்ச்சியில் பங்கு பெறுவதையொட்டி
மாணவர்கள் இதில் கலந்துகொள்ள வேண்டும் என (QR CODE) பொருத்தப்பட்டுள்ள துண்டு பிரச்சாரங்களை, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது,
எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் ராகுல் காந்தி, “மாணவர்களின் குரல்” (Chhatron Ki Goonj) என்ற நாடு தழுவிய பிரச்சாரத்தின் கீழ், வரும் அக்டோபர் 10 அன்று சென்னை தீவுத்திடலில் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாட தமிழகம் வருவதையொட்டி
தமிழக காங்கிரஸ் கட்சியினர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களிடம் துண்டுப் பிரசுரங்கள் (Pamphlets) வழங்கி, இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் காங்கை குமார், தலைமையில்
திருவள்ளூர் அடுத்த பெருமாள் பட்டு, பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி வளாகமுன்பு கல்லூரி மாணவர்களிடையே வருகின்ற பத்தாம் தேதி சென்னை வருகை தர இருக்கும் ராகுல் காந்தியை, நேரில் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் விதமாக( QR CODE) பொருத்தப்பட்டுள்ள துண்டு பிரச்சாரங்களை வழங்கப்பட்டு இந்நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்குமாறு
அழைப்பு விடுத்தனர்.
இதில்,
சதா பாஸ்கரன்,
ஈகை ஜோஷி,சிவகுமார், கே ஆர் அன்பழகன், ஈகை தேவேந்திரன், பொன்ராஜ்,

















