மயிலாடுதுறை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் மற்றும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஆட்சியரிடம் மனு அளித்து அறிவித்துள்ளனர் :-
தமிழ்நாட்டில் அவசரகால மேலாண்மை சேவையின் கீழ் இயங்கி வரும் சுமார் 1,353 ஆம்புலன்ஸ்களில் பணியாற்றும் சுமார் 7,000 ஊழியர்களின் நலன், ஊதியம் மற்றும் பணிப்பாதுகாப்பை முன்னிறுத்தி, தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் (தொ.மு.ச) சார்பில் 11 அம்ச கோரிக்கைகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம்
மனு அளித்து வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். பி.பி.பி (PPP) முறையைக் கைவிட்டு, தமிழ்நாடு அரசே 108 ஆம்புலன்ஸ் சேவையை நேரடியாக ஏற்று நடத்த வேண்டும்; சுமார் 7,000 தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர் தீர்ப்பாயத் தீர்ப்பின்படி ஊதிய உயர்வு, குறைந்தபட்ச போனஸ் (8.33%), வழக்குச் செலவுத் தொகை ரூ.25,000 மற்றும் தீபாவளி போனஸ் நிலுவைகளை 9% வட்டியுடன் உடனடியாக முழுமையாக வழங்க வேண்டும். தொழிலாளர் தீர்ப்பாயத் தீர்ப்பின் அடிப்படையில் ஊதியப் பலன்கள் பாதிக்கப்படாமல் 3 ஷிப்ட் முறையில் 8 மணி நேர வேலையை அமல்படுத்த வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 1 ஆண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
பைட் :-
பாஸ்கரன் – மாவட்டச் செயலாளர்

















