மதுராந்தகம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம்
மதுராந்தகம் சட்டமன்றத்
தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமனை (திமுக சட்டத்துறை இணைச் செயலாளர்) ஆதரித்து, திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தின்போது, திமுக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
குறிப்பாக கருங்குழியில் மகளிர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் அங்கிருந்து புறப்பட்டு அச்சரப்பாக்கம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்

















