திருவாரூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பேரணி நடைபெற்றது.
திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி. ரோட் சேஃப்டி கிளப் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கைகளில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியப்படியும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியபடியும் கல்லூரி மாணவ மாணவிகள் பேரணியாக சென்றனர்.
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த பேரணியானது, திருவாரூர் கடைத்தெரு வழியாக வலம் வந்து இறுதியாக திருவாரூர் பழைய ரயில் நிலையத்தில் நிறைவடைந்தது.
இந்த பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

















