சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா சீர்காழி அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்செல்வன் தொடங்கி வைத்தார்
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம் ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் அக்கட்சியினும் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் தொடக்க விழா தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் இன்று மதுரையில் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இத்திட்டம் விரிவாக்கப்பட்டு அந்தந்த துறைகள் வாயிலாக குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது அதனை ஒட்டி இன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் ஜூன் 22 முதல் பிறந்த 21 குழந்தைகளுக்கு முதல் கட்டமாக சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன், சீர்காழி நகர மன்ற உறுப்பினர் துர்கா தேவி ராஜசேகரன், தலைமை மருத்துவர் அருண் ராஜ்குமார் ஆகியோர் தலைமையிலும் டாக்டர் அறிவழகன், டாக்டர் சண்முகசுந்தரம், மகப்பேறு மருத்துவர் சுபாஷினி, டாக்டர் ஜெயக்குமார் ஆகியோரின் முன்னிலையிலும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு மோதிரத்தை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் சீர்காழி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற இரட்டையர்களுக்கும் தனித்தனியாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டார்கள்.















