September 27, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

by Satheesa
September 27, 2026
in News
A A
0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் ஆதாரமாக திகழும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு 2 மாதத்திற்கும் மேலாக தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக ஆற்றில் கலக்கும் அவலம்..

ஆறுகளில் நிலவும் நீர் பற்றாக்குறையால் குடிநீரைக் கொண்டு ஆற்றில் தண்ணீர் விடும் அரசு நிர்வாகம் – குடிநீர் வடிகால் வாரியமும், நகராட்சி நிர்வாகமும் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய முன் வராமல் தங்களுக்கு பொறுப்பு இல்லை என மாற்றி மாற்றி குறை கூறி வருவதால் பரபரப்பு.

ஒருபுறம் குடிநீர் கிடைக்கவில்லை எனக் கூறி தினந்தோறும் மக்கள் காலி குடங்களுடன் சாலையில் இறங்கி போராடிவரும் நிலையில், இரண்டு மாதத்திற்கு மேலாக தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் ஆற்றில் கலப்பதை கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு அதிகாரிகள்.

டெல்டா மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சீரிய முயற்சியால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதி மக்களின் நீர் தேவையை போக்கும் பிரதான குடிநீர் ஆதாரமாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் விளங்கி வருகிறது.

தினந்தோறும் திருவாரூர் வழியாக பல லட்சம் லிட்டர் குடிநீர் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் ராட்சத குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, 2கிலோமீட்டர் தூரத்தில் சாலையோரத்தில் பதிக்கப்பட்டுள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறியது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறிய அளவில் வெளியேறிய குடிநீர், காலப்போக்கில் உடைப்பு அதிகமாகி தற்போது லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது.

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் இருந்து வெளியேறும் குடிநீர், சாலை ஓரம் உள்ள ஓடம்போக்கி ஆற்றில் சென்று கலக்கும் வகையில் குடிநீரே தனக்கான வழியை உருவாக்கி ஆற்றில் கலக்கிறது.

இதனால் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி ஆற்றில் கலப்பதால் வறண்டு போன ஓடம் போக்கியாறு, தற்போது குடி நீரால் நிரம்பி காணப்படுகிறது.

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு ஐந்து நாட்களுக்கு முன்னதாக தான் திருவாரூர் பகுதிக்கு ஆற்றில் நீர் வந்தது ஆனால் மேட்டூரில் தண்ணீர் திறப்பதற்கு முன்பே ஓடம்போக்கி ஆற்றில் இரண்டு மாதகாலமாக நீர் நிரம்பி காணப்பட்டுள்ளது. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குடிநீர் ஆற்றில் கலந்து ஆற்று நீராக மாறி இருப்பதே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இரண்டு மாத காலத்திற்கும் மேலாக தினந்தோறும் லட்சக்கணக்கான குடிநீர் ஆற்றில் கலந்து கோடிக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து குடிநீர் குழாய்களில் அவ்வப்போது உடைப்புகள் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாவதும், அதனை சரி செய்வதும் வழக்கமாக உள்ள நிலையில், முக்கிய பிரதான குடிநீர் குழாயான இந்த இந்தப் பகுதியில் இரண்டு மாத காலத்திற்கும் மேலாக ஏற்பட்ட இந்த உடைப்பை சரி செய்யாமல் இருப்பது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தற்போது உடைந்த குடிநீர் குழாயை சரி செய்யாமல், தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீரை ஆற்றில் கலந்து விடும் அரசு அதிகாரிகள் மனிதாபிமானமற்ற போக்கிற்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

நாகப்பட்டினம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஏற்பட்ட இந்த குடிநீர் குழாய் உடைப்பு என்பது சாலையில் செல்லும் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் தெரியவாய்ப்பில்லை.

ஏனெனில் சாலையோரம் கீழ் பகுதியில் உடைப்பை ஏற்பட்டு ஆற்றில் நீர் கசிவது குறித்து பொதுமக்களுக்கு தெரியாமல் இருந்தாலும், மற்றதுறை அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்தாலும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

இருந்த போதும் இதனை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முன் வராத காரணமாக இரண்டு மாத காலத்திற்கு மேலாக கோடிக்கணக்கான லிட்டர் குடிநீர் ஆற்றில் கலந்து வீணாகும் அவல நிலை நீடித்து வருகிறது.

இந்த உடைப்பை யார் செய்வது சரி செய்வது என்பது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கும் திருவாரூர் நகராட்சி அதிகாரிகளுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இரண்டு துறை அதிகாரிகளுமே எங்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை அவர்களுக்குத்தான் சம்பந்தம் உள்ளது என மாற்றி மாற்றி கூறி வருவதாக கூறப்படுகிறது.

யாருக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, பொதுமக்களுக்கு சம்மதம் இருக்கிறது. சாதாரண பொதுமக்கள் தான் இந்த குடிநீரை உபயோகப்படுத்தி வருகின்றனர். எனவே உடனடியாக இந்த உடைப்பை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

பேட்டி: அழகர் ராஜ் – விவசாயி

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

Next Post

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

Related Posts

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்
News

ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு
News

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

பதக்கம் வாங்க வந்த விளையாட்டு வீராங்கனைகள் பரிதவிப்புக்கு உள்ளான அவலம்

September 27, 2026
Next Post
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

0
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.