September 27, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கடைமடை வரை தண்ணீர் வந்து சேராத நிலையில் உடனடியாக சம்பா சாகுபடி செய்யாதீர்கள விவசாயிகள் ஆதங்கம்

by Satheesa
September 27, 2026
in News
A A
0
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கடைமடை வரை தண்ணீர் வந்து சேராத நிலையில் உடனடியாக சம்பா சாகுபடி செய்யாதீர்கள். நாங்கள் அதற்கு உறுதுனையாக இருக்க மாட்டோம். தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று தமிழக அரசு தங்களுடைய தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் ஆதங்கம்…

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில் இந்த மாதம் ஒன்றாம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு 25 நாட்களாகியும் இதுவரை விளை நிலங்களுக்கு தண்ணீர் வந்து சேராத நிலையில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடி செய்வதில் பெரும் கவலை அடைந்துள்ளனர் .
இது குறித்து விவசாயிகள் தெரிவித்ததாவது….

டெல்டா மாவட்டங்களில் இந்த வருடம் என்பது விவசாயம் என்பது முற்றிலும் இல்லாமல் போயிருக்கிறது. குறுவை சாகுபடி என்பதை முற்றிலுமாக செய்ய முடியாத அளவிற்கு விவசாயிகள் தண்ணீர் இல்லாத ஒரு நெருக்கடியில் இந்த வருடம் குறுவை சாகுபடி என்பதை ஒட்டுமொத்தமாக விவசாயிகள் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

தண்ணீர் பற்றாக்குறையில் கர்நாடகாவிலிருந்து தண்ணீரை பெற்று பெற்று கொடுக்க வேண்டிய இந்த அரசு தண்ணீரை பெற்று கொடுக்காத காரணத்தினால் சம்பா பயிரின் தொடக்க வேலைகளை கூட தாமதமாக தொடக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த மாதம் தான் இந்த அரசு மேட்டூரிலே தண்ணீரை திறந்துவிட்டது. தண்ணீர் கடைமடை பகுதிக்கு இந்த நிமிடம் வரைக்கும் விளைநிலங்களுக்கு தண்ணீர் ஏறவே இல்லை. தண்ணீர் ஆற்றோடு செல்கிற ஒரு நிலையே இருக்கிறது. அதற்கு காரணம் கிட்டத்தட்ட ஒரு 20,000 கனஅடி முறை வைக்காமல் தண்ணி வைத்தால் மட்டுமே அது வயலுக்கு வந்து சேரும்.

ஆனால் அப்படி திறக்காத காரணத்தினால் இன்றைக்கு விவசாயிகள் வயல்களில் வேலைகள் செய்ய முடியாத அளவிற்கு ஒரு நெருக்கடியில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறோம். கோடை உழவு செய்து வயல் வேலைகள் அப்படியே கிடைக்கின்றன.

இந்த நிலையில் இனிமேலும் விவசாயம் செய்ய முடியுமா என்கின்ற ஒரு அச்சம். விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கு. அதனால் இந்த அரசு உடனடியாக விவசாயிகளுக்கு ஒரு வழிகாட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

சம்பா சாகுபடி செய்யலாமா செய்ய வேண்டாமா என்பதை விவசாயிகளுக்கு உடனடியாக அவர்கள் அறிவுறுத்த வேண்டும். இல்லாவிட்டால் விவசாயத்திலே ஏதாவது செய்கிறோம் என்று மாட்டிக்கொண்டு தண்ணீர் திறப்பார்கள் என்று மாட்டிக்கொண்டு விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகின்ற ஒரு சூழ்நிலை ஏற்படும்.

கடனை வாங்கி விவசாயம் செய்து ஒரு சிக்கலுக்கு ஆளாகின்ற நிலை ஏற்படும். இது விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளுமே தவிர எந்த விதத்திலயும் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்காது என்பதை நாங்கள் கண்டிப்பா அரசுக்கு சொல்கிறோம் .
உடனடியாக விவசாயிகளுக்கு சரியான வழிகாட்டுதலை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த ஆண்டு குறுவை சாகுபடி போய்விட்டது . இப்போது சம்பா சாகுபடியும் தற்போது தண்ணீர் வந்தும் கடைமடை வரை சேரவில்லை என்றால் சம்பா சாகுபடியும் போய்விடும். நாங்கள் எப்படிதான் இந்த விவசாயத்தை செய்ய போகிறோம் என்று தெரியவில்லை. அதற்க்கான வழியை அரசுதான் சொல்லணும்.

ஜோசப் விஜய் அரசினுடைய அறியாமையினாலும் அவர் விவசாயிகளை கலந்து ஆலோசிக்காதாலும் இப்பொழுது விவசாயிகள் பெரிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரியை நம்பிதான் சாகுபடி செய்கிறார்கள் .இந்த ஆண்டு காவிரி பொய்த்துவிட்டது மழையும் பொய்த்துவிட்டது. இந்த நிலையில் நாளைக்கு என்ன நடக்கும் என்பதை தெரியாமலும் விவசாயிகள் கலந்து ஆலோசிக்காமலும் மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக திறக்கப்பட்டது.

இதன் காரணமாக தொடர்ந்து எத்தனை நாளைக்கு தண்ணீர் வரும் , இன்னும் கூட கடைமடைக்கு வந்து சேரவில்லை என்பது வேற விஷயம். இந்த தண்ணீர் எத்தனை நாளைக்கு வரும் இதன் மூலம் எவ்வளவு எவ்வளவு தூரம் சாகுபடி செய்யலாம் என்பது விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.

அரசாங்கம் இதற்கு ஒரு விடை கண்டு உடனடியாக நீங்க நடவு செய்ய வேண்டாம் என்ற ஒரு செய்தியை சொல்லிவிடலாம். நீங்க சம்பா சாகுபடி செய்யாதீர்கள். நாங்கள் அதற்கு உறுதுனையாக இருக்க மாட்டோம் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று தங்களுடைய தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்.

அல்லது விவசாயிகளுக்கு எப்படியாவது கர்நாடக கெஞ்சி கூத்தாடி தண்ணீர் பெற்று தர வேண்டும். இது ரெண்டுல ஒன்று அரசாங்கம் செய்யலனா விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாவார்கள் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து கொள்கிறோம்.
இது மிகப்பெரிய ஒரு மோசடியான ஒரு நம்பிக்கையை விவசாயிகளுக்கு அளித்து அவர்களுடைய நம்பிக்கையை தகர்ப்பதாக உள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இது ஒரு விஷயம். ரெண்டாவது இப்ப நல்லா தெரியும் உங்களுக்கு மேட்டூர் அணையில தண்ணி இல்ல. இங்க சாகுபடி பண்ண முடியாது அப்படிங்கறது தெரியும். இதுல நேரடி விதைப்பு பண்ணலாம் அப்படிங்கிற மாதிரி சில ஆலோசனைகள் எல்லாம் புத்திசாலிகள் எல்லாம் சொல்லிட்டு இருக்காங்க அது ரொம்ப பெரிய முட்டாள்தனமான விஷயம் நேரடி விதைப்பினால் நிலம் எவ்வளவு சீர்கட்டு இருக்கு அதன் மூலமா கலைக்கொல்லியை நிறைய மக்கள் பயன்படுத்தி விவசாயிகள் பயன்படுத்தி அதன் மூலமா மண்ணின் வளம் கெட்டு இப்ப எல்லா இடத்திலயுமே சாயல் ஹெல்த்ன்னு ஒரு பெரிய கேம்ப் நடத்திட்டு இருக்காங்க .

ஆனா அது இன்னும் அரசாங்கத்துக்கு தெரியுமா இல்ல அரசாங்கம் அதுலயும் தூங்கிட்டு இருக்காங்கறது தெரியல இதுல ஏதாவது நீங்க விழிச்சுக்கங்க நேரடி விதைப்பை அதிகம் வற்புறுத்தாதீங்க நடவுதான் விவசாயிகளுக்கு லாபம் ரெண்டாவது கலைக்கொல்லி இல்லாம மண்ணோட நலத்தை காப்பாற்றலாம் அதனால அப்படி ஒரு முட்டாள்தனமான யோசனை ஆட்சியாளர்கள் கூறாமல் என்ன நடக்குமோ அதை எதார்த்தத்தை மட்டும் சொல்லி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்பது இந்த நேரத்தில் உங்களை பதிவாக விடுத்துக்கொள்கிறோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பேட்டி:வரதராஜன், ராமமூர்த்தி விவசாயிகள்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆசிய விளையாட்டு போட்டியில், போல் வால்ட் எனப்படும் கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் மயிலாடுதுறை சார்ந்த இந்திய வீராங்கனை வெண்கல பதக்கம்

Next Post

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தூய்மை பணி

Related Posts

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்
News

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்
News

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்
News

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு
News

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026
Next Post
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தூய்மை பணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

0
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.