ஆசிய விளையாட்டு போட்டியில், போல் வால்ட் எனப்படும் கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் மயிலாடுதுறை சார்ந்த இந்திய வீராங்கனை வெண்கல பதக்கம் வென்றார், பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையும் படைத்துள்ளார், தமிழக அரசு சார்பில் 30 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டதற்கு குடும்பத்தினர் நன்றியும், முதலமைச்சர் ஜோசப் விஜயின் ட்விட்டர் பதிவிற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் :-
ஆசிய விளையாட்டுப் போட்டியின் இருபதாவது தொடர் ஜப்பான் அய்ச்சி நகோயாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜப்பான் சீனா இந்தியா தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த 11 ஆயிரம் வீரர் வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். இந்த தொடரில் கம்பு ஊன்றி தாண்டுதல் (போல் வால்ட் ) போட்டி பலோமா மிசுகோ திடலில் இன்று நடைபெற்றது. இந்தியா சார்பில் இதில் பங்கேற்ற வீராங்கனை பரணி இளங்கோவன் 4.15 மீட்டர் உயரம் தாண்டி கஜகஸ்தான் வீராங்கனை போலீனா இவனோ பாவு உடன் வெண்கல பதக்கத்தை பகிர்ந்து கொண்டார். இந்திய வீராங்கனை பரணிகா இளங்கோவன் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த சேத்திரபாலபுரம் கிராமத்தை சார்ந்தவர் ஆவார். 28 வயதான பரணிகா பெண்களுக்கான போல் வால்ட் பிரிவில் ஆசிய விளையாட்டு வரலாற்றிலேயே பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார். இந்த செய்தி அறிந்த அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், அவருக்கு தமிழக அரசு சார்பில் 30 லட்ச ரூபாய் பரிசு தொகை அறிவித்துள்ளனர். இதற்காக தமிழக அரசுக்கு தங்கள் நன்றியை பெற்றோர் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பதிவு வெளியிட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பைட் :-
1.இளங்கோவன் – பரணிகாவின் தந்தை
2.மதுமதி – பரணிகாவின் சகோதரி













