கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக ஆட்சி கால கட்டத்தில் பால் வினியோகம் எந்த ஒரு நெருக்கடிகளை சந்திக்காமல் இருந்த நிலையில் தற்போதைய ஆட்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளொன்றுக்கு 25 ஆயிரம் பாக்கெட் பால் தேவைப்படும் நிலையில் 12,500 பாக்கெட் பால் மட்டுமே விநியோகம் செய்யப்படுவதாக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சந்தரம் குற்றச்சாட்டு.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளரும் ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவருமான முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார் தொடர்ந்து அவர் பேசுகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக ஆட்சி கால கட்டத்தில் தொடர்ந்து பத்து ஆண்டுகளும் பொதுமக்களுக்கு அடிப்படை அத்தியாவசிய தேவையான பால் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய ஆட்சியில் ஏழை எளிய சாதாரண மக்களுக்கு தேவைப்படக்கூடிய பால் விநியோகம் செய்வதில் சிக்கலை சந்தித்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளொன்றுக்கு 25,000 பாக்கெட் பால் தேவைப்படும் நிலையில் தற்போது 12,500 பாக்கெட் பால் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சி காலகட்டத்தில் இதுபன்ற எந்த இன்னல்களும் நேரிடவில்லை தற்போதைய ஆட்சி பால் கொள்முதல் விலையை ஏற்றியும் பயனில்லை பாலுத்து உற்பத்தியாளர்களின் நிலை மோசம் அடைந்துள்ளது அதிமுக காலகட்டத்தில் அடிப்படை தேவையான பால் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்காக மாட்டு தீவனம் புண்ணாக்கு உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்பட்டன அதிமுக காலகட்டத்தில் ஆவின் வளர்ச்சி அதிக அளவு காணப்பட்டது ஆவின் கூட்டுறவு சங்கம் லாபத்தில் சென்று கொண்டிருந்தது தற்போதைய ஆட்சி கால கட்டத்தில் ஆவின் கூட்டுறவு சங்கங்களில் நிலை கேள்விக்குறியாகி உள்ளது என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் குற்றம் சாட்டி பேசினார்.













