ஆவடி அடுத்த கவரப்பாளையம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு திருப்பதி திருக்குடை பெருமாள் பாதத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன
திருப்பதி பிரம்மோற்சவ விழாவினையொட்டி, சென்னை இந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும் புனிதத் திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருப்பதி திருக்குடைகள் ஆவடி அடுத்த கவரப்பாளையம் பகுதியில்அமைந்துள்ள ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்குடை கவரப்பாளையம் பொறுப்பாளர் ஆர் கோதண்டன் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டில் உற்சாக வரவேற்பு நடைபெற்றது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிறப்புப் பூஜைகளுடன் கவரப்பாளையம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்குவருகை தந்த திருக்குடைகளுக்கு ஆலய நிர்வாகிகளும், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அமைப்புகள் சார்பில் பூத்தூவியும், தேங்காய் உடைத்தும் திருப்பதி திருக்குடைகளுக்குகோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு பக்தர்கள்”கோவிந்தா… கோவிந்தா…” என்ற முழக்கம் எழுப்பினர்
பொதுமக்கள் தடையின்றி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆலயத்திற்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஜெயகோபால் நாயுடு. குணசேகரன் நாயுடு . பாண்டுரங்கம். தாமு. குணா பாபு. மற்றும் திருக்குடைகளின் வருகையை ஒட்டி கவரப்பாளையம் பகுதியே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்மீக பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர்














