மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 40க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் இளைஞர்கள் ஆரவாரத்துடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, காசிக்கு நிகரான புகழ்பெற்ற காவிரி துலாக்கட்டத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது:-
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் சுமார் 600க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பொதுமக்கள் மூன்று நாள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர். நேற்று தரங்கம்பாடி பகுதியில் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்ட நிலையில் இன்று மயிலாடுதுறை காவல் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு ஆலயங்களில் இந்து முன்னணி சார்பில் 37 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா விசர்ஜனம் நடைபெற்றது. கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர்களை பக்தர்கள் ஊர்வலமாக மேள வாத்தியங்கள் பேண்டு வாத்தியங்கள் முழங்க இளைஞர்கள் ஆரவார நடனத்துடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மயிலாடுதுறை காவேரி துலா கட்டத்திற்கு வாகனங்களில் எடுத்து வந்தனர். அங்கு தீபாராதனை எடுத்து ஒவ்வொரு விநாயகர் சிலையாக காசிக்கு நிகரான புகழ்பெற்ற துலாக்கட்ட காவிரியில் விசர்ஜனம் (கரைப்பு) செய்யப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹா பிரியா தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு, இந்து முன்னணி மாவட்டத் தலைவர் சரண்ராஜ் மாவட்ட பொதுச் செயலாளர் சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.














