மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்தது. சிறப்பு பூஜைகள் செய்து மலர் தூவி காவிரி அன்னையை வரவேற்று நொடிக்கு 803 கன அடி தண்ணீரை நீர்வள ஆதாரத்துறையினர் திறந்து விட்டனர்.
ஆண்டுதோறும் டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம். காவிரியில் போதிய நீர் இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று மேட்டூரில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். தொடக்கத்தில் விநாடிக்கு 3,000 கனஅடி திறக்கப்பட்டு பின்னர் அதிகரிக்கப்பட்டது. 45 நாள்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காவிரி நீர் இன்று காலை 10 மணிக்கு காவிரி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு முதல் கதவணை விக்ரமண் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கியில் வந்தடைந்தது. தொடர்ந்து நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர் , உதவி பொறியாளர் யாஷிகா தலைமையில் பொதுமக்கள் காவிரி அன்னையை வரவேற்று சிறப்பு பூஜைகள் செய்து நொடிக்கு 803 கன அடி நீரை பாசனத்திற்காக திறந்து விட்டனர். மேட்டூர் அணையின் விதிகளின் படி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூர் கடைமடை கதவணை பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும். இதன் படி இன்னும் ஓரிரு தினங்களில், தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், முறை வைக்காமல் தண்ணீரை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பைட் :-
செந்தில் – பொதுமக்கள்

















