தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், நாற்பதாவது அமைப்பு தினத்தை முன்னிட்டு, ஏராளமான அரசு அலுவலர்கள் ஊழியர்கள் ரத்ததானம் செய்தனர் :-
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அரசு அலுவலர்கள் சங்கத்தின் 40 ஆவது அமைப்பு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கத்தின் சார்பில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஊழியர்கள், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர். இவர்களிடம் பெறப்பட்ட ரத்தம், மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டு, ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

















