நாகை அவுரி திடலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஜோசப் விஜய் உருவ கேலி செய்ததை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது
தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் , திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மிசா வில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை சட்டப்பேரவையில் உருவ கேலி செய்து கொச்சைப்படுத்தி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பேசியதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். தவெக கூட்டணி, ஆதரவு கட்சிகளான விசிக, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் இதற்கு கண்டனங்களை தெரிவித்தனர். அதன்படி மு.க ஸ்டாலினை கொச்சைப் படுத்திய தமிழக முதல்வர் விஜய்யை கண்டித்து நாகை அவுரி திடலில் கண்டன ஆர்பாட்டம் இன்று நடைபெற்றது. நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் விஜய்க்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியபடி திமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.

















