கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரத்யங்கிரா கோயில் ஆவணி
அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு யாகம் அபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்தபிரத்யங்கிரா கோயில் உள்ளது. இக்கோயிலில் பக்தர்கள் திருமண தடை, வேலைவாய்ப்பு தடை மற்றும் பல்வேறு தடை, உள்ளிட்ட பல்வேறு தோஷ நிவர்த்திகளுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர். இக்கோயிலில் ஆவணி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதனை தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்திற்கு முன்புற யாக குண்டத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. மிளகாய் மற்றும் பல்வேறு நறுமண பொருட்கள்யாக குண்டத்தில் இடப்பட்டது. தொடர்ந்து யாக குண்டத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக்கொண்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைக்குப் பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

















