கன்னியாகுமரி மாவட்டம்: சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த இளம் செஸ் வீரர் அஸ்வந்திற்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 17 வயது மாணவன் அஸ்வந்த் அவருடைய தந்தை சிவா செஸ் விளையாட்டு பயிற்சி மையம் நடத்தி வருகிறார். சிறு வயது முதலே செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அஸ்வந்த் தனது மூன்றாவது வயதில் இருந்து தந்தையின் செஸ் விளையாட்டு பயிற்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் புனேயில் நடைபெற்ற சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் கடைசி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதி சுற்றில் அமெரிக்கா வீரர் கண்ணன் வைத்தியநாதன் கருப்பு காய்களுடன் வீழ்த்தியதன் மூலம் இந்தியாவில் 98-வது கிராண்ட் மாஸ்டர் மற்றும் தமிழ்நாட்டின் 38 வதும், கன்னியாகுமரி மாவட்டத்தின் முதலாவது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் பெற்றுள்ளார். பட்டம் பெற்ற இளம் வீரருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் நேரில் அழைத்து பரிசுகள் வழங்கி பாராட்டி கௌரவித்தார். மேலும் தொடர்ந்து இது போன்ற சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று கன்னியாகுமரி மாவட்டத்தையும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என கூறி பாராட்டுகளை தெரிவித்தார்.















