கணவன்–மனைவி உறவை வலுப்படுத்தும் யோகா!
மாலைகளை மாற்றி… கண்களை மூடி… காந்த பரிமாற்ற தவம்!
கொளத்தூரில் 150-க்கும் மேற்பட்ட தம்பதியர் பங்கேற்ற மனைவி நல வேட்பு விழா
!
சென்னை கொளத்தூரில், கணவன்– மனைவிக்கிடையேயான அன்பு, புரிதல் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில், டீச்சர்ஸ் காலனி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது.
கொளத்தூர் வீனஸ் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், புதுமணத் தம்பதியர் முதல் வயது முதிர்ந்த தம்பதியர் வரை 150-க்கும் மேற்பட்ட தம்பதியர்கள் கலந்து கொண்டனர்.
தம்பதியர்களின் மன உணர்வுகள் ஒன்றிணைந்து, இல்லற உறவு மேலும் வலுப்பெறும் வகையில் சிறப்பு யோகா மற்றும் மனவளக்கலை பயிற்சிகள் நடத்தப் பட்டன.
திருச்சியைச் சேர்ந்த பேராசிரியர் K. ராஜேந்திரன் நிகழ்ச்சியை நடத்தினார்.
இதில், கணவன்–மனைவி எதிரெதிரே அமர்ந்து, ஒருவரது கண்களை ஒருவர் ஆழ்ந்து பார்த்தபடி அமைதியாக பயிற்சி யில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, தம்பதியர்கள் ஒருவருக்கொரு வர் மாலைகளை மாற்றிக் கொண்டு, ஒருவர் மீது ஒருவர் கை வைத்து கண்களை மூடியபடி காந்த பரிமாற்ற தவம் மேற் கொண்டனர்.
பின்னர், கணவர்கள் எழுந்து தங்களது மனைவியருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு தம்பதியர்களாக பேராசிரியர் அருள்நிதி S. முருகன் – பேராசிரியர் அருள்நிதி M. நாகலட்சுமி உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு, தம்பதி யர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த துடன், இல்லற வாழ்வில் அன்பு, புரிதல் மற்றும் விட்டுக்கொடுத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.
அன்பும்… புரிதலும்… நல்லிணக்கமும்தான் இல்லற வாழ்வின் அடித்தளம் என்பதை வலியுறுத்திய இந்த மனைவி நல வேட்பு விழா, தம்பதியர்களிடையே மன ஒற்றுமை யையும் உறவின் நெருக்கத்தையும் மேம்படுத்தும் நிகழ்வாக அமைந்தது














