ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள் மனித குலத்திற்கு” என்ற உலகப் புகழ்பெற்ற தத்துவத்தை முழங்கிய ஸ்ரீ. நாராயணகுரு அவர்களின் 172-வது குரு ஜெயந்தி விழாவை முன்னிட்டு கன்னியா குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்த தமிழக அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
அவரது 172வது குருஜெயந்தி விழாவை தொடர்ந்து நாகர்கோவில் கோட்டாறில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றி கழக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவரது குருஜெயந்தி விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட கழக இணை செயலாளர் பிரேம் குமார், இளைஞர் அணி அமைப்பாளர் வாகை ராஜன் மாநகராட்சி கவுன்சிலர் அக்ஷயா கண்ணன் உள்ளிட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்













