திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் 365 நாட்களும் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து செல்லும் சிறப்பு பெற்ற ஆலயம் தினமும் ஆயுள் ஹோமம் சதாபிஷேகம் கனகாபிஷேகம் சஷ்டியப்த பூர்த்தி உள்ளிட்ட சிறப்பு யாக பூஜைகள் நடைபெறுகிறது உள்ளூர் வெளியூர் வெளிமாவட்டம் வெளிநாடு அரசியல் பிரபலம் திரை பிரபலம் என அனைத்து துறையை சார்ந்த முக்கியஸ்தர்கள் வந்து செல்கின்றனர் இந்நிலையில் கோவிலுக்கு திரைப்பட நடிகர் சமுத்திரக்கனி தனது உறவினர் இல்ல நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தார் சமுத்திரகனியை பார்த்த பக்தர்கள் பலர் ஆர்வத்துடன் அவருடன் பேசி சென்றனர் கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.















