வருடத்திற்கு மூன்று சிலிண்டர் வழங்கும் திட்டம், விலையில்லா பேருந்து பயணத்திட்டம் உள்ளிட்ட முதலமைச்சரின் அறிவிப்பிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வரவேற்பு, தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என மயிலாடுதுறையில் பேட்டி: –
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அமைந்துள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறும் பொழுது, மகளிர்க்கு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டம், மூன்று சிலிண்டர் வழங்கும் திட்டம், பரந்தூர் விமான நிலையத்தை கைவிடும் திட்டம் ஆகிய தமிழக அரசின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கதாகும், அதே நேரத்தில் தமிழக வெற்றி கழகம் தேர்தல் வாக்குறுதிகள் அறிவித்தபடி முழுமையாக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், என்று தெரிவித்தார். குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் ஏக்கருக்கு நிவாரணம் வழங்க வேண்டும், சாகுபடி செய்யப்பட்டு, தற்போது மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 30,000 நிவாரணம் வழங்க வேண்டும், இதுபோல் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க முன் வர வேண்டும். காவிரி பிரச்சனையில், நமக்கு உபரி நீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது, உரிய நீரை தருவதில்லை இதனை நீதிமன்றத்தில் நாம் அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும், தமிழர்கள் அனைவரும் இந்த பிரச்சனையில் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று தெரிவிப்பதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும், சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கும் தேதி பற்றி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தெரிவித்தார். தனது மேஜையில் மூன்று பைல்கள் இருப்பதாக, முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்கு பதில் கூறிய அவர், தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தான், அதற்காக, கோப்புகள் இருப்பது என மிரட்டும் வகையில் பேசக்கூடாது. என்று தெரிவித்தார்.
பைட்: –
பெ.சண்முகம் – மாநிலச் செயலாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி













