மயிலாடுதுறையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலை திருவிழா, பரதநாட்டியம் கரகாட்டம் தமிழர்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு வகையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகள், மாவட்ட ஆட்சியர் போட்டிகளை துவக்கி வைத்தார், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா இன்று துவங்கியது. திருவிழாவில் ஓவியம் கட்டுரை பேச்சுப் போட்டி நாடகப் போட்டி பாடல் கிராமிய நடனம் இசைக்கச்சேரி தோல் கருவி இசைக் கச்சேரி, கரகாட்டம் வில்லுப்பாட்டு பொய்க்கால் குதிரை, கிளாசிக் நடனம், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் துவங்கியது. போட்டிகளை, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சுதா முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், துவக்கி வைத்தார். நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர் இந்த போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவ மாணவிகள் அடுத்த கட்டமாக மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றனர்.













