கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் மெகா இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது- இருசக்கர வாகன பேரணியில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து பேரணியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்தில்லா மாவட்டமாக மாற்ற மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன அதில் குறிப்பாக இருசக்கர வாகனம் இயக்குபவர்கள் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாய தலைக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் பின்னால் இருப்பவர்களும் விபத்தில் இருந்து பாதுகாக்கப்படும் என்ற நோக்கோடு மாவட்ட காவல்துறையானது இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் கட்டாய தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட காவல் துறை சார்பாக மெகா இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதில் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி செட்டிகுளம் சந்திப்பு வழியாக சென்று பார்வதிபுரம் மேம்பாலம் வழியாக இறுதியாக வடசேரி பேருந்து நிலையத்தில் சென்றடையும். சாலையின் இருபுறங்களும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பதாகைகள் ஏந்தி வாகன பேரணியானது நடைபெற்றது. இதில் சிறப்பம்சமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஹெல்மெட் அணிந்து நேரடியாக இருசக்கர வாகன பேரணியில் பங்கேற்று இருசக்கர வாகனத்தில் சென்றபடியே பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக இருசக்கர பேரணியில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துள்ளது.
பேட்டி: ஸ்டாலின் ( கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி)













