மயிலாடுதுறையில் தஞ்சை மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 அணிகள் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் செவன் ஸ்டார் கைப்பந்து கழகம் சார்பில், எட்டாம் ஆண்டு தஞ்சை மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த, பள்ளி அணிகள் போட்டியில் பங்கேற்றுள்ளன. பள்ளி மாணவர்களுக்கான போட்டி மற்றும் , பொதுப்பறிவு போட்டியாகிய இரண்டு பிரிவுகளில், நாக்அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன. பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வரும் விளையாட்டு போட்டிகளை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.















