மயிலாடுதுறை அருகே கோடங்குடி கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக பகிரங்கமாக சாராய விற்பனை செய்யப்படுவதாகவும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் மாமூல் வாங்கி செல்வதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார். தட்டி கேட்பவர்களுக்கு கொலைமிரட்டல் விடுக்கப்படுவதாகவும், உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில் சாராய விற்பனை படுஜோராக நடைபெறுவதாகவும், சாக்குப்பையில் வைத்து மங்கைநல்லூர், கோடங்குடி கிராமங்களில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக இரண்டு நாட்களுக்கு முன்பு சாராயம் விற்பனை செய்யும் இரண்டு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் கோடங்குடி கிராமத்தில் 24 மணி நேரமும் சட்டத்தறிகு புறம்பாக சாராய விற்பனை நடைபெறுவதாகவும், தட்டி கேட்பவர்களுக்கு கொலைமிரட்டல் விடுக்கப்படுவதாகவும், போலீசார் மாமூல் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஶ்ரீகாந்திடம் மனு அளித்த கோடங்குடி கிராமமக்கள் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செந்தில்குமார் அவரது தாயார் சந்திரா ஆகிய இருவரும் கோடங்குடி கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக சாராய விற்பனை செய்து வரும் நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் நடந்து செல்லும் பிரதான வீதி, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சாராயம் விற்பனை செய்யப்படுவதால் அச்சத்துடன் மாணவர்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். சாராயம் வாங்குவதற்காக வாகனத்தில் அதிவேகமாக வரும் நபர்களால் விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், தட்டிக் கேட்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டிய பொதுமக்கள் பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் மாமுல் வாங்கிக்கொண்டு போலீசார் செல்வதாக கடுமையான குற்றசாட்டை முன் வைத்துள்ளனர். பொதுமக்களின் மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பேட்டி: சரண்யா கோடங்குடி













