எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரங்களை கொண்டு மோசடி நடைபெறுகிறது எனவே மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம் என திருவாரூரில் திமுக முன்னாள் அமைச்சர் மனோ. தங்கராஜ் பேட்டி.
திருவாரூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அலுவலகத்தில் அரசமைப்பு சட்டப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாநாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது இதில் திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் , மற்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
அரசமைப்பு சட்டத்தினுடைய விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்கத்தோடு வருகின்ற 21 ஆகஸ்ட் அன்று சென்னையில் ஒரு மாபெரும் கோரிக்கை மாநாடு நடைபெற இருக்கிறது.
இந்த மாநாட்டில் அரசமைப்பு சட்டத்தின் விழுமியங்களை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு கொண்ட பொதுமக்களும் இன்றைக்கு பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய இஸ்லாமிய ,கிறிஸ்தவ சமூகங்களை சார்ந்த மக்களும் அதே போன்று விளிம்பு நிலையில் வாழுகின்ற மக்கள் குறிப்பாக பட்டியல் இன சகோதரர்களும் சேர்ந்து இந்த மாநாட்டை ஒரு பெரிய அளவில் ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
இன்றைக்கு கல்வி மற்றும் சமூக நிலையில் பின்பற்றி இருக்கக்கூடிய சமூகங்களை சார்ந்த மக்கள் இஸ்லாமியர்கள் மதம் மாறுகின்ற போது அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3.5% இட ஒதுக்கீட்டு உரிமை இன்றைக்கு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக அதற்கு ஒரு சிறப்பு சட்டம் கொண்டு வந்து அதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
அதே போன்று இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஏழை எளிய மக்கள் விளாம்புநிலை மக்களுக்காக பல்வேறு நலத்ததிட்டங்களை செய்வதற்காக வெளிநாடுகளிலிருந்து வருகின்ற நிதியை வரவிடாமல் எடுக்க ஒன்றிய பாஜக அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இது அந்த மக்களுடைய வாழ்வாதாரத்தை பெரிய அளவில் பாதிக்க இருக்கிறது. எனவே அவர்கள் முன்மொழிந்திருக்கக்கூடிய இந்த எப்சிஆர் ஏ திருத்த சட்டத்தை உடனடியாக பின்வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகிறோம்
அதேபோன்று அரசமைப்பு சட்டத்தினுடைய அந்த நோக்கங்களுக்கு மாறாக தொடர்ந்து சிறுபான்மை சமூக மக்களை குறிவைத்து அவருடைய உணர்வுகள் பண்படுகின்ற விதத்தில் பேசியும் நீதிமன்ற தீர்ப்புகளில் கருத்துக்களை கூறி வருகின்ற நம்முடைய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நாடாளுமன்றத்தில் அந்த இம்பீச்மென்ட் மூவ் பண்ணி இருக்காங்க அது அப்படியே கிடப்பில் இருக்கிறது அது குறித்து விவாதம் எடுக்கவில்லை.
அந்த விவாதத்தை எடுக்க வேண்டும் என்றும் அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அளித்திருக்கக்கூடிய புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இந்த கிறிஸ்தவ சமூகத்தை தழுவி காலங்காலமாக வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய பட்டியல் சமூக அந்த ஏழை எளிய மக்கள் அவர்களுக்கு பட்டியல் சமூக சான்று வழங்க வேண்டும். அதேபோன்று எம்பிசி வகுப்பை சார்ந்த மக்கள் அவர்களும் நீண்ட காலமாக தலைமுறை தலைமுறையாக கிறிஸ்தவத்தை தழுவியவர்கள் அவர்களுக்கும் அந்த சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக எம்பிசி சான்று வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மையப்படுத்தி இந்த கோரிக்கை மாநாட்டினை அரசமைப்பு சட்ட பாதுகாப்பு இயக்கம் மூலமாக நானும் நம்முடைய நீதியரசர் அன்புக்குரிய ஹரிபரந்தாமன் அவர்களும் தம்பி அன்புக்குரிய தம்பி வாஞ்சிநாதன் அவர்களும் இன்றைக்கு பல அமைப்புகளோடு நடைபெற உள்ளது
எல்லாரும் இணைந்துதான் இதனை நாங்கள் நடத்த திட்டமிட்டுருக்கின்றோம் இது ஒரு பெரிய வெற்றி அடைவதற்காக நாங்க பல்வேறு முயற்சிகளை எடுத்து பல்வேறு மாவட்டங்களில் சென்று அந்த மக்களை சந்தித்து இந்த பிரச்சனைகளுடைய தீவிரத்தை பற்றி பேசி வருகிறோம்.
மக்கள் மத்தியில ஒரு நல்ல எழுச்சி இருக்கிறது நாங்கள் ஒரு பெரிய கூட்டம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம் இதன் மூலமா ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன் .
மத்திய அரசு மாநில நாடாளுமன்ற தொகுதி அதிகரிப்பது குறித்த கேள்விக்கு…..அது எப்படி டிலிமிடேஷன் வந்து எந்த சூழ்நிலையில நமக்கு பாதிப்புதான் டிலிமிடேஷன் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அதே போன்று எஸ்ஐஆர் என்ற ஒன்றை கொண்டு வந்து குறி வைத்து இன்றைக்கு பல்வேறு சமூகங்களை சார்ந்த மக்களை நீக்குவது அதே போன்று இந்த எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷன் வைத்து தொடர்ந்து மக்களை ஏமாற்றி தேர்தலில் தில்லுமுல்லு செய்வது மாற்றி பேலட் தான் கொண்டு வரணும் போன்ற கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் நாங்களும் அதனை திரும்ப திரும்ப வலியுறுத்துவோம் என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் திமுக சிறுபான்மை அணி நிர்வாகி ரோலி, தமுமுக மாவட்ட செயலாளர் நவாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.













