சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு பலத்த காயத்துடன் சீர்காழி அரசு மருத்துவமனை சிகிச்சை போலீசார் விசாரணை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓதவந்தன்குடி கிராமத்தை சேர்ந்த சார்லஸ் மேரி, வெண்ணிலா ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சீர்காழி புறவழிச் சாலைகள் செல்லும் போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கழுத்தில் இருந்த மூன்று பவுன் நகையை பறித்து தப்பி சென்றனர் அப்பொழுது இருவரும் கீழே விழுந்ததில் சார்லஸ் மேரிக்கு தலையில் பலத்த அடிபட்டது அருகில் உள்ள மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இச்சம்பவம் சீர்காழியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது இது குறித்து சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.















