மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உழவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் உழவர்களை பாதிக்கக்கூடிய உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.O திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய வலியுத்தியும், மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொன்னி, தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராசு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து, உழவர் பெருமக்களின் அதிக வருமானத்தை ஈட்டி தரக்கூடிய தோட்டக்கலை வளர்ச்சியை பாதிக்கக்கூடிய 2.0 திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும், தோட்டக்கலை பட்டம் மற்றும் பட்டியதாரர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய திட்டத்தை கைவிட வேண்டும் வல்லுனர் குழு மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்தப்பட்ட திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.















