குழித்துறையில் ‘விக்சித் பாரத் யுவா கனெக்ட்’ நிகழ்ச்சி; போதை இல்லா இந்தியா குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள ஸ்ரீதேவி குமாரி மகளிர் கல்லூரியில் தேசிய மாணவர் சேவைத் திட்டம் (NSS) சார்பில் ‘விக்சித் பாரத் யுவா கனெக்ட்’ மற்றும் ‘நஷா முக்த் யுவா ஃபார் விக்சித் பாரத்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் பொறுப்பாளர் டாக்டர் எம். சீதாலெட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு, சமூகப் பொறுப்பு மற்றும் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் இளைஞர் முன்னோடி ஐஸ்வர்யா ஸ்ரீ, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துசெல்வம் மற்றும் மாவட்ட இளைஞர் அலுவலர் சரண் வி. கோபால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதில் ஏராளமான NSS மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.













