தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது..
மயிலாடுதுறை திருவிழந்தூர் தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, சேத்தங்குடி கூட்டுறவு நகரை சேர்ந்த விம்மானுவேல் மகன் வீரமணி (வயது 29) என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த கஞ்சா மற்றும் அவர் விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர். பின்னர் கைது செய்யப்பட்ட வீரமணி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கஞ்சா விற்பனை குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் வீரமணி மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிநேகா ப்ரியா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த், வீரமணியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுபடி நேற்று மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் வீரமணியை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.














