உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் பிரபல நடிகர் அருள்நிதி பெற்றோருக்கு பீமரத சாந்தி விழா குடும்பத்தினர் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் வருடம் 365 நாட்களும் ஆயுள் விருத்திக்காக ஆயுள் பூஜை 60, 70,80,90 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு சஷ்டி பூர்த்தி சதாபிஷேகம் கனகாபிஷேகம் பீமரத சாந்தி உள்ளிட்ட விழாக்கள் நடைபெறுகிறது இந்நிலையில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களின் சகோதரர் மு க தமிழரசு அவர்களின் 70 வது வயது ஒட்டி மு க தமிழரசு மற்றும் அவர் மனைவி மோகனா அவர்களின் பீமரத சாந்தி விழா கோவிலில் நடைபெற்றது இதில் மு க தமிழரசுவின் மகனும் பிரபல திரைப்பட நடிகருமான அருள்நிதி மற்றும் அவர் குடும்பத்தினர் பங்கேற்றனர் பூஜைகள் நடைபெற்று பீமரத சாந்தி விழா சிறப்பாக நடைபெற்றது குடும்பத்தினர் மற்றும் திமுக நிர்வாகிகள் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பங்கேற்றனர் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்களும் வழங்கப்பட்டது பலர் ஆர்வத்துடன் நடிகர் அருள்நிதிவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.















