விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கிழக்கு நகர பகுதிகளில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் அவர்கள் தன்னை இரண்டாவது முறையாக வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு வீதி வீதியாக நடந்து சென்று இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தார் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்
கழகத் தலைவர், மாண்புமிகு தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க, விழுப்புரம் மத்திய மாவட்டம், விழுப்புரம் சட்டமன்ற தொகுதி, கிழக்கு நகர பகுதிகளான
ஜி ஆர் பி தெரு சேவியர் காலனி
அமச்சார் கோயில் தெரு, சித்தேரிக்கரை,கைவல்லியர் தெரு, வடக்கு தெரு, புதுத்தெரு, எம் ஜி ஆர் ரோடு,,அய்யனார் குளம், உள்ளிட்ட பகுதிகளில், விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா.இலட்சுமணன் அவர்கள் தன்னை இரண்டாவது முறையாக வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காள பெருமக்களுக்கு வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களுக்கும் கடைகளில் வியாபாரிகளுக்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து அவர் சென்ற அனைத்து பகுதிகளிலும் மாலை அணிவித்து சால்வை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர் உடன் விழுப்புரம் நகர மன்ற முன்னாள் தலைவர் ஜனகராஜ் விழுப்புரம் கிழக்கு நகர செயலாளர் வெற்றிவேல் , நகர மன்ற உறுப்பினர் மணவாளன் மற்றும் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கபாலி மற்றும் நகர நிர்வாகிகள், மாவட்ட, நகர சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நகர பிரதிநிதிகள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.














