எலான் மஸ்கின் ஸ்டார் லிங்க் இந்தியாவில் இணைய சேவை வழங்க தயாராகிட்டு வருது. இதனால ஏற்படும் நன்மை, பாதிப்புகள் என்ன?
உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க், டெஸ்லா கார் தயாரிப்பு, ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிலையம், எக்ஸ் வலைத்தள பக்கம் என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வராரு..இப்போ அவரோட கண்ணு தொலைத்தொடர்பு துறை மீது விழுந்திருக்கு. அப்படி தான், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை இந்தியாவில் விரைவில் அறிமுகமாக இருக்கு…
ஸ்டார்லிங் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் போது, monthly unlimited data 840 ரூபாய்க்கும் குறைவாக வழங்கபடும்ன்னு சொல்லப்படுது . இப்படி கொடுத்த ஏர்டெல், ஜியோ, விஐ மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவற்றுக்கு கடுமையான போட்டியை வரவும் வாய்ப்புகள் இருக்கு…
ஸ்டார்லிங், செயற்கைக்கோள்களை பயன்படுத்தி, 50 Mbps முதல் 200 Mbps வரை பதிவிறக்க வேகம் மற்றும் 20-30 மில்லி செகண்டுகள் தாமதம் கொண்ட இணைய சேவையை வழங்க இருக்கு இது, video call , online gaming மற்றும் hd streaming போன்ற செயல்பாடுகளுக்கு ஏற்றதாவும் இருக்கும்.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான Airtel மற்றும் Jio உடன் கூட்டணி அமைத்து, இந்தியாவில் தனது சேவைகளை விரிவுபடுத்த ஸ்டார்லிங், திட்டமிட்ருக்காங்க.. ஸ்டார்லிங் சேவையின் வெற்றிக்கு, இந்திய அரசின் ஒப்புதல், விலை நிர்ணயம் மற்றும் உள்ளூர் போட்டியாளர்களுடன் போட்டி போன்ற அம்சங்கள் முக்கியமா இருக்கும்..
ஸ்டார் லிங்க் திட்டத்தில் மாதாந்திர டேட்டா திட்டங்கள் குறைந்த விலையில் இருக்கலாம் என்றாலும், பயனர்களுக்கு ஹார்டுவேர் செலவுகள் ஒரு பிரச்சனையாக இருக்கலாம் . ஏன் அப்படின்னா, ஸ்டார்லிங்கின் இந்த kit தோராயமாக ரூ. 21,300 – ரூ. 32,400 வரை இருக்கும்ன்னு சொல்லபடுது.