குத்தாலம் பேருந்து நிலையத்தில் தமிழக அரசை கண்டித்து பாஜக பட்டியல் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் :-
தமிழகத்தில் பட்டியல் மற்றும் பழங்குடி இன மக்களுக்கு துரோகம் செய்யும் தமிழக அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் பாஜக பட்டியல் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்டியல் அணி மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மத்திய அரசு வழக்கறிஞர் கே.ராஜேந்திரன், தங்க.வரதராஜன், அகோரம், மாவட்ட தலைவர் நாஞ்சில்பாலு, பட்டியல்அணி மாநில துணைத்தலைவர் அய்யாசுரேஷ் மாவட்ட பொருளாளர் சித்ராமுத்துக்குமார் மற்றும் என்.டி.ஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றி கண்டன முழக்கமிட்டனர்.

















