வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தரங்கம்பாடியில் கடல் சீற்றம். மீனவர்களின் கடலுக்கு செல்லவில்லை.
வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததை தொடர்ந்து இன்று காலை முதல் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது மேலும் தரங்கம்பாடி கடற்கரையில் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சார்பில் அறிவித்திருந்ததை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை ஏற்கனவே மீன் பிடிக்க சென்ற மீனவர்களும் கரை திரும்பி வருகின்றனர்.
















