August 19, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

67 ஆண்டுகளாக வாடகைக் கட்டிடத்தில் சோழவந்தான் நூலகம்  இட நெருக்கடியால் நடைபாதையில் படிக்கும் மாணவர்கள்

by sowmiarajan
January 2, 2026
in News
A A
0
67 ஆண்டுகளாக வாடகைக் கட்டிடத்தில் சோழவந்தான் நூலகம்  இட நெருக்கடியால் நடைபாதையில் படிக்கும் மாணவர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அரை நூற்றாண்டைக் கடந்தும் முறையான சொந்தக் கட்டிடம் இன்றி இயங்கி வரும் அரசு கிளை நூலகத்தால், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போதிய இடவசதி இல்லாததால் மாணவர்கள் நூலக நடைபாதையில் அமர்ந்து படிக்கும் அவல நிலை நீடிப்பதால், புதிய கட்டிடம் கட்ட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சோழவந்தான் இரட்டை அக்ரஹாரப் பகுதியில் கடந்த 67 ஆண்டுகளாக ஒரே வாடகைக் கட்டிடத்தில் இந்த நூலகம் இயங்கி வருகிறது. மிகவும் பழமையான இந்தக் கட்டிடம் குறுகலாக இருப்பதோடு, போதிய வெளிச்சம் மற்றும் காற்றோட்ட வசதி இன்றி உள்ளது. தினமும் காலை முதல் மாலை வரை டி.என்.பி.எஸ்.சி (TNPSC), வங்கிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகும் மாணவர்கள் இங்கு வந்து படிக்கின்றனர். ஆனால், நூலகத்திற்குள் அமர இடமில்லாததால், வேறு வழியின்றி வாசலிலும், நடைபாதையிலும் அமர்ந்து படிக்கும் சூழல் நிலவுகிறது.

இது குறித்து வேதனையுடன் பேசிய மாணவர்கள் மலர்க்கொடி, கங்கேஸ்வரி மற்றும் சுல்தான், “வீட்டில் படிப்பதைக் காட்டிலும் நூலகத்தில் குழுவாகப் படிப்பது எங்களுக்குப் பெரும் ஊக்கமாக உள்ளது. இங்குத் தேர்வுக்குத் தேவையான அனைத்துப் புத்தகங்களும் உள்ளன. ஆனால், அமர்ந்து படிக்கத் தேவையான நாற்காலிகள் இருந்தும், அவற்றைப்போட இடவசதி இல்லை. குறிப்பாகக் கழிப்பறை வசதி இல்லாதது மாணவிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அரசு உடனடியாகப் புதிய கட்டிடத்தை அமைத்துத் தந்தால் எங்கள் எதிர்காலத்திற்குப் பெரும் உதவியாக இருக்கும்” எனத் தெரிவித்தனர்.

நூலகத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “நூலகக் கட்டிடம் கட்டத் தேவையான நிதி தயாராக உள்ளது. ஆனால், பேரூராட்சி நிர்வாகம் ஒதுக்கும் இடம் மக்கள் நடமாட்டம் இல்லாத ஊருக்கு வெளியே இருந்தால் அது யாருக்கும் பயன்படாது. சோழவந்தான் சனீஸ்வரன் கோயில் எதிரே உள்ள பழைய வானொலி பூங்கா நிலத்தில் சுமார் 10 சென்ட் இடம் உள்ளது. தற்போது அங்கு அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. அந்த இடத்தை நூலகத்திற்கு ஒதுக்கிக் கொடுத்தால், இங்கிருக்கும் இரண்டாம் நிலை நூலகத்தை முதல் நிலை நூலகமாகத் தரம் உயர்த்தவும் வாய்ப்புள்ளது” என்றனர்.

இது குறித்துப் பேரூராட்சி அதிகாரிகள், “புதிய நூலகக் கட்டிடம் அமைப்பதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இடப் பிரச்சனை தொடர்பாக உரிய ஆய்வு செய்து, கூடிய விரைவில் நூலகக் கட்டிடம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்துள்ளனர். தமிழக அரசு அறிவுசார் மையங்களை உருவாக்கி வரும் வேளையில், 67 ஆண்டுக்கால சோழவந்தான் மக்களின் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags: buildingcholavandaneducation rentedhistorylibrary
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உலக நன்மைக்காகச் சோழவந்தான் வேத பாடசாலையில் மகா ஹோமம் சதுர்வேத பாராயணத்துடன் களைகட்டிய ஆன்மீக விழா!

Next Post

தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதால் அவதி குடம் ரூ.15-க்கு வாங்கும் அவலம்  செமினிப்பட்டி மக்கள் கண்ணீர்!

Related Posts

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு
News

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

June 8, 2025
டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

August 18, 2026
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

August 18, 2026
டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

0
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

0
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

0
பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

0
டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

August 18, 2026
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

August 18, 2026
பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

August 18, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.